தேவநேய பாவாணரின் தூய தமிழ் சொற்கள்
தேவநேய பாவாணரின் தூய தமிழ் சொற்கள்
அகதி - ஏதிலி
அக்கினி நட்சத்திரம் - எரிநாள்
அங்கவஸ்திரம் - மேலாடை
அங்குலம் - விரலம்
அசரீரி - உருவிலி
அஞ்சலி - கும்பீடு, இறுதி வணக்கம்
அதிகாரபூர்வம் - அதிகாரச் சான்று
அதிசய மனிதர் - இறும்பூதாளர்
அதிர்ஷ்டம் - ஆகூழ்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அத்வைதம் - இரண்டன்மை
அநேக - பல
அநேகமாக - பெரும்பாலும்
அந்தரங்கம் - மருமம், கமுக்கம், மறைமுகம்
அந்தஸ்து - தகுதி
அபயம் - ஏதம், கேடு
அபராதம் - தண்டம்
அபாயம் - இடர்
அபிப்ராயம் - கருத்து, ஏடல்
அபிமானம் - நல்லெண்ணம்
அபிவிருத்தி - மிகுவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபூர்வம் - அருமை
அப்பியாசம் - பயிற்சி
அமரர் - நினைவில் உரை, காலஞ் சென்ற
அமாவாசை - காருவா
அமோகம் - மிகுதி
அரபிக்கடல் - குட கடல்
அராஜகம் - அரசின்மை
அர்ச்சகர் - வழிபாட்டாசான்
அர்த்தம் - பொருள்
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசகுனம் - தீக்குறி
அவசியம் - வேண்டியது, தேவை
அவதாரம் - தோற்றரவு
அவயவம் - உடலுறுப்பு
அற்புதம் - இறும்பூது, நேர்த்தியான
அனுபல்லவி - துணைப் பல்லவி
அனுபவம் - பட்டறிவு
அனுபவித்தல் - நுகர்தல்
அனுமானம் - உய்த்துணர்வு
அனுஷ்டி - கடைபிடி, கைக்கொள்
அன்னாசி - செந்தாழை
அன்னியம் - அயல்
அஸ்திவாரம் - அடிப்படை
ஆகாய விமானம் - வானூர்தி
ஆகாரம் - உணவு, உண்டி
ஆசனம் - இருக்கை
ஆசித்தல் - விரும்புதல்
ஆசிர்வாதம் - வாழ்த்து
ஆச்சரியம் - வியப்பு
ஆச்சாரம் - ஒழுக்கம்
ஆடம்பரம் - பகட்டு
ஆடி (மாதம்) - கடகம்
ஆட்சேபனை - மறுப்பு, தடை
ஆதங்கம் - மனக்கவலை
ஆதரவு - அரவணைப்பு, களைகண்
ஆதரி - தாங்கு, அரவணை
ஆதாரம் - நிலைக்களம்
ஆத்திசம் - நம்புமதம்
ஆத்திரேலியா - தென்கண்டம்
ஆபத்து - இடுக்கண், இடையூறு
ஆபரணம் - அணிகலன்
ஆப்பிள் - அரத்தி
ஆமோதி - வழிமொழி
ஆயத்தம் - அணியம்
ஆயுள் - வாழ்நாள்
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம்
ஆரோகணம் - ஆரோசை
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலாபனை - ஆளத்தி
ஆலோசனை - கருத்து
ஆவணி (மாதம்) - மடங்கல்
ஆனந்தம் - மகிழ்ச்சி, களிப்பு
ஆனி (மாதம்) - ஆடவை
ஆன்மா (ஆத்மா) - ஆதன்
ஆஸ்தி - செல்வம்
ஆஷேபி - தடு
இங்கிதம் - குறிப்பு, குறிப்பறிதல்
இதிகாசம் - மறவனப்பு
இந்தியா - நாவலம்
இந்திரன் - வேந்தன்
இந்துக்கள் - தென் மதத்தார்
இமயமலை - பனிமலை
இரகசியம் - மந்தணம்
இரசவாதம் - பொன்னாக்கம்
இராசதம் - மாந்திகம்
இராசி - ஒப்புரவு
இராஜேந்திரன் - அரசேந்திரன்
இருதயம் - நெஞ்சம்
இலட்சியம் - குறிக்கோள்
இலட்சுமி - திருமகள்
இஷ்டம் - விருப்பம்
ஈஸ்வரன் - இறைவன்
உச்சரிப்பு - பலுக்கல்
உத்தியோகம் - அலுவல்
உத்தேசம் - மதிப்பு
உபகாரம் - நன்மை
உபச்சாரம் - வரவேற்பு
உபதேசம் - ஓதுவம்
உபதேசியார் - ஓதுவார்
உபயம் - கொடை (நன்கொடை)
உபவாசம் - உண்ணா நோன்பு
உபாத்தியாயர் - ஆசிரியர்
உபாயம் - ஆம்புடை, சூழ்ச்சி
உலோகம் - மாழை
உலோபி - இவறி
உல்லாசம் - மகிழ்ந்திருத்தல்
உற்சாகம் - ஊக்கம்
உஷ்ணம் - வெப்பம்
ஊர்ஜிதம் - உறுதி
எஜமான் - தலைவன், முதலாளி
ஏக்கர் - குறுக்கம்
ஏதேன் தோட்டம் - கனிமரக்கா தோட்டம்
ஐப்பசி (மாதம்) - துலாம், துலை
கதாபாத்திரம் - நடிகலம்
கருணாநிதி - அருட்செல்வன்
கருணை - அருள்
கருமி - கஞ்சன்
கர்நாடக சங்கீதம் - தமிழிசை
கர்வம் - செருக்கு
கர்ஜனை - முழக்கம்
கலாநிதி - கலைச்செல்வன்
கவி - பாட்டு, செய்யுள்
கவியோகி - பாவோகி
கஷ்டம் - துன்பம்
காரணம் - கரணியம்
காரியம் - கருமியம்
கார்த்திகேயன் - அரலன்
கார்த்திகை (மாதம்) - நளி
கார்த்திகை (விண்மீன்) - ஆரல்
காவியம் - வனப்பு, செய்யுட் தொடர்
காளமேகம் - கார்முகில்
கிருபை - இரக்கம்
கிருபை - அருள்
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - சரவடி
கோவனம் - நீர்ச்சீலை
சகலம் - எல்லாம்
சகலன் - ஓரகத்தான்
சகஜம் - வழக்கம்
சகாப்தம் - ஆண்டுமானம்
சகுனம் - குறி
சகோதரன் - உடன்பிறந்தான்
சக்கரவர்த்தி - பேரரசன், மாவேந்தன்
சக்தி - ஆற்றல்
சங்கடம் - தொல்லை, இடர்ப்பாடு
சங்கம் - கழகம்
சங்கற்பம் - மனவுறுதி
சங்கிலி - தொடர், இருப்புத் தொடர்
சங்கீதம் - இன்னிசை
சட்னி - துவையல்
சதி - சூழ்ச்சி, கெடுப்பு
சத்தம் - ஓசை, ஒலி
சத்தியம் - உண்மை
சத்துரு - பகைவன்
சந்ததி - வழி மரபு, பிறங்கடை
சந்தர்ப்பம் - சமயம், சூழல்
சந்திரன் - மதி, நிலை
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நிதி - முன்னிலை
சந்நியாசி - துறவி
சப்போட்டா - உருளையன்
சமத்துவம் - சமன்மை
சமாச்சாரம் - செய்தி
சமீபம் - அண்மை
சமுதாயம் - குமுகாயம்
சமுத்திரம் - வாரி, பெருங்கடல்
சமூகம் - இனத்தார்
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி, நிகழ்வு
சம்பாஷனை - உரையாட்டு
சம்பிரதாயம் - சடங்கு
சம்பூரணம் - முழு நிறைவு
சரணம் - அடைக்கலம்
சரஸ்வதி - கலைமகள்
சரீரம் - உடம்பு
சர்பத்து - மட்டு
சர்வதேசம் - பன்னாடு
சல்லாபம் - உரையாட்டு (களிப்புடன்)
சவால் - அறைகூவல்
சனி - காரி
சன்மார்க்கம் - நல்வழி
சஷ்டி - அறமி
சாட்சி - சான்று, சான்றாளர்
சாதகம் - சார்பு
சாதம் - சோறு
சாதனை - வெற்றிச் செயல்
சாதனையாளர் - ஆற்றலாளர்
சாதாரணம் - பொதுவகை
சாந்தம் - சமந்தம், அமைதி
சாபம் - சாவம்
சாமானியன் - எளியவன்
சாலகம் - சாய்கடை
சாஸ்திரம் - கலை நூல்
சிங்காசனம் - அரியணை
சித்தரிரை (மாதம்) - மேழம்
சித்தாந்தம் - கொண்முடிபு
சித்திரவதை - நுண் சிதைப்பு
சித்திரா பௌர்ணமி - மேழ வெள்ளுவா
சித்திரை (விண்மீன்) - அறுவை
சிநேகிதம் - நட்பு
சிந்தனை - எண்ணுதல், கருதுதல்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - பணியாளர்
சிலுவை - குறுக்கை
சின்னச்சாமி - சின்னாண்டான்
சீக்கிரம் - விரைவு
சீலர் - மேலோர்
சுகம் - நலம், உடல் நலம்
சுகவீனம் - உடல் நலக்குறைவு
சுதந்திரம் - விடுதலை, உரிமை
சுத்தம் - துப்புரவு
சுந்தரம் - அழகு, அழகனார்
சுபம் - மங்கலம்
சுபாவம் - இயல்பு
சுமை - பொறை
சுயமரியாதை - தன்மானம்
சுயமாய் - தானாய்
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுரணை - உணர்ச்சி, உணர்வு
சுலபம் - எளிது
சுலோகம் - சொலவம்
சுவாசம் - மூச்சு
சுவாமி - ஆண்டவன், கடவுள்
சுவாமிகள் - அடிகள்
சுவீகாரம் - தெத்து
சூது - விகற்பம்
செல்வாக்கு - சாய்கால்
சேவகன் - இளயன்
சேவை - தொண்டு, ஊழியம்
சேனாபதி - படைத் தலைவன்
சேஷ்டை - குறும்பு
சைவ உணவு - மரக்கறி உண்டி
சைவம் - சிவனியம்
சொகுசு - மகிழ்வு
சொப்பனம் - கனா
சொரூபம் - உண்மை வடிவம்
சொர்க்கம் - விண்ணுலகு
சௌகரியம் - ஏந்து
சௌக்கியம் - உடல் நலம்
ஞாபகம் - நினைவு
ஞானம் - அறிவு
ஞானியார் - ஓதியார்
தசமி - பதமி
தட்சணாமூர்த்தி - தென்முக நம்பி
தட்சனபூமி - தென்புலம்
தட்சனை - காணிக்கை
தத்துவம் - மெய்ப்பொருள்
தந்தம் - மருப்பு
தந்திரம் - வலக்காரம்
தயவு - இரக்கம்
தயார் - அணியம்
தருணம் - சமயம்
தருமசங்கடம் - அறத்தடுமாற்றம்
தருமம் - அறம்
தற்காலிகம் - இடைக்காலம்
தனுசு - சிலை
தாசி - தேவரடியாள்
தாரகமந்திம் - மூலமந்திரம்
தாவரம் - நிலைத்திணை
தானம் - கொடை
தானியம் - தவசம்
தியாக சீலன் - ஈகச் செம்மல்
தியாகம் - ஈகம்
தியாகி - ஈகி
தியானம் - ஊழ்கம்
திராட்சை - கொடி முந்திரி
திரிமூர்த்தி - முத்திருமேனி
திருப்தி - பொந்திகை
தினம் - நாள்
தீட்சிதர் - தீர்க்கையர்
தீபம் - சுடர்
தீபாவளி பண்டிகை - விளக்கணி திருவிழா
தீர்க்கதரிசி - முற்காணி
தீவிரவாதி - கொடுமுனைப்பாளி
துக்கம் - துயரம்
துப்பாக்கி - துமுக்கி
துரோகி - இரண்டகன்
துர்க்கை - காளி
துஷ்டன் - தீயவன்
தேகம் - உடல்
தேதி - பக்கல்
தை (மாதம்) - சுறவம்
தைரியம் - துணிவு
தைலம் - எண்ணெய்
நடராசன் - நடவரசன்
நட்சத்திரம் - வெள்ளி, விண்மீன்
நதி - ஆறு
நந்தி - காளை, விடை
நபி - முன்விளம்பியார்
நமஸ்காரம் - வணக்கம்
நரபலி - நரக்காவு
நவரசம் - தொண்சுவை
நஷ்டம் - இழப்பு
நாசம் - அழிவு, சேதம்
நாதசுரம் - இசைக்குழல்
நாதம் - ஒலி
நாத்திகம் - நம்பாமதம்
நாவல் - புதினம்
நிகண்டு - உரிச்சொற்றொகுதி
நிசப்தம் - அமைதி
நிச்சயம் - உறுதி
நித்தியானந்தம் - நித்திலின்பன்
நித்திரை - தூக்கம்
நியதி - நயன்மை
நியமி - அமர்த்து
நியாயம் - நேர்மை, முறை
நிருபணம் - மெய்ப்பு
நிர்ணயம் - தீர்மானம்
நிர்மூலம் - வேரறுப்பு
நிர்வாகி - ஆட்சியாளர்
நிஜம் - மெய், உண்மை
நீசபாஷை - இழிமொழி
நீதி - நயன்மை
நீதிக்கட்சி - நயன்மைக்கட்சி
பகதூர் - ஆண்டகை
பகிரங்கம் - வெளிப்படை
பகிஷ்காரம் - புறக்கணிப்பு
பக்குவம் - பருவம், தெவ்வி
பக்தன் - அடியான்
பக்தி - இறை நம்பிக்கை
பக்ஷி - பறவை
பங்குனி (மாதம்) - மீனம்
பசலி - பயிராண்டு
பசு - ஆவு
பசுப்பால் - ஆவின் பால்
பஞ்சாங்கம் - ஐந்திரம்
பஞ்சாமிர்தம் - ஐயமது
பஞ்சேந்திரியம் - ஐம்புலன்
பதார்த்தம் - பண்டம், கறி
பதிலாக - பகரமாக
பத்திரம் - ஆவணம்
பத்திரிகை - இதழ், இதழிகை
பத்தினி - கற்புடையாள்
பத்மபூஷன் - தாமரைச் செல்வர்
பத்மவிபூஷன் - தாமரைப் பெருஞ்செல்வர்
பத்மஸ்ரீ - தாமரைத்திரு
பந்து - இனம்
பரதநாட்டியம் - தமிழ் நடம்
பரமாத்மா - பரவாதன்
பரம்பரை - தலைமுறை
பரவாயில்லை - தாழ்வில்லை
பரஸ்பரம் - தலைமாறு, இருதலை
பரிகாசம் - நகையாடல்
பரிகாரம் - கழுவாய்
பரியந்தம் - வரையில்
பஜனை - தொழுகைப் பாடல்
பாகவதர் - பாடகர்
பாத்திரம் - கலம்
பாயாசம் - கன்னல்
பாரத ரத்னா - நாவன்மணி
பாரம் - சுமை, பொறை
பாவம் - கரிசு, அறங்கடை
பாவனை - உன்னம்
பிடிவாதம் - ஒட்டாரம்
பிரக்ஞை - உணர்ச்சி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசன்னம் - திருமுன்னிலை
பிரசாதம் - அருட்சோறு, திருச்சோறு
பிரச்சாரம் - பரப்புரை
பிரச்சினை - சிக்கல், தொல்லை
பிரதிபலன் - கைமாறு
பிரத்தியோகம் - தனிச்சிறப்பு
பிரபந்தம் - பனுவல் (கலை நூல்)
பிரபு - பெருமகன்
பிரமாணம் - அளவு, ஆணை
பிரயோகம் - ஆட்சி, வழங்கல்
பிராண வாயு - உயிர்வளி
பிராது - முறையீடு, வழக்கு
பிரியாணி - புலவு
புதன் - அறிவன் (கிழமை)
புரட்டாசி (மாதம்) - கன்னி
புராணம் - பழங்கதை
புராதனம் - பழமை
புரோகிதர் - சடங்காசிரியர்
பூசுரர் - நிலத்தேவர்
பூமத்திய ரேகை - நண்ணிலக்கோடு
பூமி - வையகம்
பூரணம் - முழுமை, நிறைவு
பெங்களூர் - வெங்காலூர்
பேட்டி - நேர்வுரை
போதி மரம் - அரச மரம்
மகத்துவம் - பெருமை
மகாசமுத்திரம் - மாவாரி
மகாத்மா - பேராதன்
மகாமகோபாத்தியாயர் - பெரும் பேராசிரியர்
மகாவித்துவான் - பெரும் புலவர்
மகிமை - மாண்பு, மாட்சிமை
மத்திய அரசு - நடுவணரசு
மத்திய தரைக்கடல் - நண்ணிலக்கடல்
மரியாதை - மதிப்புரவு
மனிதன் - மாந்தன்
மாசி (மாதம்) - கும்பம்
மாத்திரை (மருந்து) - முகிழம்
மார்கழி (மாதம்) - சிலை
மாலுமி - வலவன்
மாஜி - மேனாள்
மிதுனம் - ஆடவை
மிராசுதார் - பண்ணையார்
மிருதங்கம் - மதங்கம்
முகஸ்துதி - முகமன்
முகூர்த்தம் - முழுத்தம்
முக்கியமான - இன்றியமையாத
மூர்க்கன் - முரடன்
மேகம் - முகில்
மேஜை - நிலை மேடை
மேஷம் - மேழம்
மைத்துனர் - கொழுந்தன், அளியர்
மையம் - நடுவம்
மோசம் - கேடு, ஏமாற்றம்
மோட்சம் - பேரின்ப வீடு
யதார்த்தம் - உண்மை
யாகம் - வேள்வி
யுகம் - ஊழி
யுத்தம் - போர்
யோகம் - ஓகம்
யோகி - ஓகி
யோக்கியம் - தகுதி
யோசி - எண்ணு
ரகசியம் - மறை பொருள்
ரங்கராஜன் - அரங்கராசன்
ரசம் - மிளகு நீர்
ரதம் - தேர்
ரதி - காமி
ரத்தம் - குருதி, அரத்தம்
ரத்தினம் - மணி
ரம்பம் - வாள்
ராகம் - பண்
ராசி - ஓரை
ராணி - அரசி
ராவ்சாஹிப் - அராவ அண்ணல்
ராவ்பகதூர் - அராவ ஆண்டகை
ராஜாசர் - அரசவயவர்
ரிஷபம் - விடை
ருசி - சுவை
ரொட்டி - அப்பம்
லக்னம் - ஓரை
லக்ஷ்மி - திருமகள்
லஞ்சம் - கையூட்டு
லாபம் - ஊதியம்
லாயம் - மந்திரம்
லிங்கம் - இலங்கம்
லுங்கி - மூட்டி
லோபி - கருமி, இவறி
வசதி - ஏந்து
வசனம் - உரைநடை
வசூல் - தண்டல்
வம்சம் - மரபு
வயது - அகவை
வருமானம் - சம்பளம்
வருஷம் - ஆண்டு
வர்க்கம் - இனம்
வர்த்தகம் - வணிகம்
வாகனம் - ஊர்தி, இயங்கி
வாக்காளர் - நேரியாளர்
வாக்கு - சொல்
வாக்கு - தொடரியம்
வாக்குச்சீட்டு - குடவோலை, நேரி
வாசஸ்தலம் - இருப்பிடம்
வாதம் - தருக்கம், போராட்டு
வாதம் (நோய்) - வளி, ஊதை
வாரிசு - பிறங்கடை, வழி மரபு
வார்த்தை - சொல்
விகற்பம் - வேறுபாடு
விசனம் - வருத்தம், துக்கம்
விசாரி - வினவு, உசாவு
விசித்திரம் - வியப்பு
விசுவநாதம் - உலக நம்பி
விசுவாசம் - நம்பிக்கை
விதி - நெறி
வித்தியாசம் - வேறுபாடு
விநோதம் - புதுமை
வியாபாரம் - வணிகம்
வியாப்தி - பரவல்
விரக்தி - பற்றின்பை
விரதம் - நோன்பு
விரோதம் - பகை
விவகாரம் - வழக்காரம்
விவசாயம் - பயிர்த் தொழில்
விவரம் - விளத்தம்
விவேகம் - அறிவுடைமை
விஸ்தீரனம் - பரப்பு
விஷம் - நஞ்சு
விஷேசம் - சிறப்பு
வீதம் - மேனி
வீதி - தெரு
வேசி - விலைமகள்
வேதம் - திருமறை
வைகாசி - விடை
வைணவம் - திருமாலியம்
வைத்தியம் - மருத்துவம், பண்டுவம்
ஜமீன்தார் - குருநில மன்னர்
ஜம்பம் - தற்பெருமை
ஜலதோஷம் - நீர்க்கோவை
ஜலம் - தண்ணீர்
ஜல்தி - விரைவு
ஜவான் - இளயன்
ஜனன மரணம் - பிறப்பு இறப்பு
ஜன்னல் - பலகணி
ஜாக்கிரதை - விழிப்பு, எச்சரிக்கை
ஜாதகம் - பிறப்பியம்
ஜாதி - குலம்
ஜாமம் - யாமம்
ஜீரணம் - செரிமானம்
ஜீவனம் - பிழைப்பு
ஜீவன் - உயிர்
ஜீவியம் - வாழ்க்கை
ஜெயம் - வெற்றி
ஜென்மம் - பிறவி
ஜோசியர் - கணியர்
ஜோதிடம் - கணியம்
ஷோக்கு - பகட்டு, தளுக்கு
தொகுப்பு
வள்ளுவர் வள்ளலார் வட்டம்🙏🙏
Comments
Post a Comment